கொரோனா – மலேசியாவில் இதுவரை 21 பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்

rumors of corona

மலேசியாவில் கொரோனா வைரசால் தற்போது இரண்டு புதிய நோயாளிகள் பாதிகப்படுள்ளதாக மலேசியா சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆகவே தற்போது இந்த நோயினால் பாதிக்கப்பட மொத்த நபர்களின் எண்ணிக்கையை 21 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இந்த நோய் தொற்றால் பாதிக்கபட்ட நால்வர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசியாவை பொறுத்தவரை கொரோனாவால் பாதிக்கப்பட 20 வது நபர் 27 வயதான சீன தொழிலதிபர் ஒருவர், இவர் நேற்று புக்கிட் கயு ஹிட்டாமின் வடக்கு சோதனைச் சாவடி வழியாக மலேசியாவிற்கு வந்துள்ளார். அப்போது அங்கு நடந்த சோதனையில் அவருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்டு தற்போது அவர் தனிமைபடுத்தப்பட்டு கெடாவில் உள்ள சுல்தானா பஹியா மருத்துவமனையின் தனிமை வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதற்கிடையில், மலேசியாவில் வசிக்கும் 32 வயதான சீன நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்ணும் நேற்று காய்ச்சல் காரணமாக கொரோனா சோதனை நடத்தப்பட்டது. MoH அறிக்கையின்படி, அந்த பெண் இந்த ஆண்டு ஜனவரி 22 முதல் 30 வரை சீனாவில் உள்ள தனது குடும்பத்தினரை சந்திக்க பயணம் செய்ததும் அவர் மலேசியா திரும்பிய போது அவருக்கு நோய் தொற்று இருப்பதும் கண்டறியப்பட்டது.