மலேசியா – ‘தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் இருந்து இதுவரை 147 பேர் தப்பியோட்டம்..!!’

noor_hisham

மலேசியாவில் கொரோனா தற்போது கட்டுக்குள் உள்ள நிலையில், கொரோனா காரணமாக தனிமைப்படுத்துதலில் வைக்கப்பட்டிருந்த பிறநாடுகளை சேர்ந்த ஏழு பேர் கடந்த திங்கள் அன்று கோலாலம்பூரில் உள்ள ஒரு மையத்தில் இருந்து தப்பி சென்றுள்ளதாக தகவல் அண்மையில் வெளியானது. இந்தோனேஷியா மற்றும் வங்காளதேசத்தை சேர்ந்தவர்களாக கருதப்படும் அந்த வெளிநாட்டினருக்கு நேற்றோடு (07.05.2020) தனிமைப்படுத்துதல் முடிவடைகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சுகாதார அமைச்ச இயக்குனர் ஜெனரல் நூர் ஹிஷாம் அப்துல்லா. இதுவரை மலேசியாவில் வெளிநாட்டவர்கள் உள்பட சுமார் 147 பேர் தனிமைப்படுத்துதல் வார்டில் இருந்து தப்பி சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார். ஆனால் அவர்கள் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்றும், முன்னெச்சரிக்கை கருதியே அவர்கள் தனிப்படுத்துதலில் வைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் தற்போது நிலவும் பொது நடமாட்டக் கட்டுப்பாட்டை உடனடியாக தளர்த்தும் திட்டம் இல்லை என்றும், இந்த விஷயத்தில் உலக சுகாதார மையத்தின் அறிவுரையின்படியே நடப்பதாகவும் அவர் தெரிவித்தார்.