‘இயல்பு நிலைக்குத் திரும்பும் ATM இயந்திரங்களின் செயல்பாட்டு நேரம்..!!’ – மூத்த அமைச்சர் அறிவிப்பு..

ATM Malaysia

ஐந்து மாதங்களுக்கு மேலாக உலகை வாட்டி வதைத்து வருகின்றது இந்த கொரோனா தொற்று நோய். உலக முழுக்க பல கோடி மக்கள் இந்த நோயினால் பாதித்துள்ள நிலையில் லட்சக்கணக்கான மக்கள் கொரோனா காரணமாக மாண்டு வருகின்றனர். மலேசியாவிலும் இதுவரை 115 பேர் இந்த நோயின் காரணமாக பலியாகியுள்ளது வருத்தமளிக்கிறது.

இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 18ம் தேதி தொடங்கிய ஊரடங்கு தற்போது வரை சில தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக நோயின் தாக்கம் சற்று குறைந்து வருவதால் அரசும் சில தளர்வுகளை அறிவித்து வருகின்றது. இந்நிலையில் இதுவரை காலை 8 முதல் இரவு 8 மணி வரை மட்டுமே பயன்பாட்டில் இருந்து ATM இயந்திரங்கள் இனி வழக்கம் போல செயல்படும்.

இந்த அறிவிப்பினை முத்த அமைச்சர் இஸ்மாயில் சபரி யாக்கோப் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். அன்றாட வங்கி நடவடிக்கைகளை மேலும் வசதியாக கையாள தற்போது ATM இயந்திரங்கள் வழக்கம்போல செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.