‘இது முற்றிலும் மனிதநேயமற்ற செயல்’ – மலேசிய அரசை சாடும் தொண்டு நிறுவனம்

rohynga people

அண்மையில், ஏப்ரல் 16ம் தேதி ‘ரோஹிங்கியா’ இன மக்கள் மலேசியாவிற்குள் வருவதை மறுத்து அவர்களை திருப்பி அனுப்பியது மலேசிய அரசு. ஆனால் இது மனிதநேயம் இல்லாத செயல் என்று ‘சுவாராம்’ என்ற தொண்டு நிறுவனம் மலேசிய அரசுக்கு எதிராக கண்டனத்தை தெரிவித்துள்ளது. கடந்த 1951ம் ஆண்டு அகதிகள் தொடர்பான ஐக்கிய நாட்டு உடன்பாட்டில் மலேசியா கையெழுத்து இடவில்லை என்றபோதும் மனிதாபிமான அடிப்படையில் அவர்களை ஏற்றிருக்கலாம் என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது.

பரவி வரும் கொரோனா தொற்று காரணமாகவே அவர்களை ஏற்க மறுத்ததாக மலேசிய ராணுவம் கூறும் நிலையில், முறையான தனிமைப்படுத்துதலை கடைபிடித்து அவர்களுக்கு தஞ்சம் அளித்திருக்கலாம் என்றும் அந்த நிறுவனம் கூறியுள்ளது. மேலும் இந்த விஷயத்தில் கியூபா நாட்டை அந்த நிறுவனம் உதாரணமாக கூறியுள்ளது.

கொரோனா பாதித்த மக்களோடு கரைசேர வழி இல்லாமல் தவித்த பயணிகள் கப்பலை தங்களது நாட்டில் கரைசேர அனுமதித்து, அந்த படகில் இருந்தவர்களுக்கு உரிய சிகிச்சையும் வழங்கி வருகின்றது அந்நாட்டு அரசு என்றும் குறிப்பிட்டுள்ளது அந்த நிறுவனம். மேலும் பல விஷயங்களில் சிறந்து விளங்கும் மலேஷியா இந்த விஷயத்திலும் பிற நாடுகளுக்கு ஒரு உதாரணமாக திகழ வேண்டும் என்றும் சுவாராம் குறிப்பிட்டுள்ளது.