மலேசியாவில் ஜூலை 1ம் தேதி முதல் மீண்டும் திரையரங்குகள் திறக்கப்படும்..?

Theater in malaysia

மலேசியாவில் மீட்சிக்கான தளர்வுகள் படிப்படியாக கடந்த மே மாதத்தில் இருந்து அறிவிக்கப்பட்டு வருகின்றது. வணிக நிறுவனங்கள் பல அங்கு திறக்கப்பட்டு வரும் நிலையில் பள்ளிகளும் விரைவில் திறக்க பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் வரும் ஜூலை 1ம் தேதி முதல் மலேசியாவில் திரையரங்குகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆனால் ஒரு மீட்டர் என்ற முறையான சமூக இடைவெளி கடைபிடிப்பதோடு முறையான கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட்டு சுமார் 250 பேருக்கு மேல் இருக்கக் கூடாது என்றும் தகவல் தெரிவிக்கின்றது. மேலும் மலேசியாவின் பொருளாதாரத்தின் முக்கிய பங்கு வகிக்கும் சில்லறை விற்பனைத்துறை, பயணத்துறை ஆகிய சங்க உறுப்பினர்களுடன் தளர்வுகள் அறிவிப்பது குறித்து ஆலோசனை ஒன்றையும் அமைச்சர் இஸ்மாயில் சபரி யாக்கோப் நடத்தினார்.

மலேசியாவில் விரைவில் அத்தியாவசிய வர்த்தகப் பயணங்களுக்கு அனுமதி அளிக்கக்கப்படும் என்று அந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. மலேசியாவில் தொற்றின் அளவு மிகவும் குறைந்து வரும் நிலையில் பல துறைகளும் மீண்டும் செயல்பாட்டிற்கு வருவது பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.