மலேசியாவில் நிலைமை சீரடைந்து வருகிறது – சுகாதாரத்துறை அமைச்சர்

Datuk Seri Dzulkefly Ahmad'

கொரோனா வைரஸ் நோய் பாதிப்பால் இதுவரை சீனாவில் சுமார் 2,200 பேர் இருந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நோய் தொற்று பரவ ஆரமித்து ஹூபே மாகாணத்தின் தலைநகர் வுஹானில் தான் அதிக அளவில் மக்கள் இருந்துள்ளதாக ஹூபே மாகாண சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இதுவரை சீனாவில் 70,000 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

உலகின் பிற நாடுகளிலும் இந்த பரவியுள்ளது, இந்நிலையில் மலேசியாவில் கொரோனா வைரஸ் பாதித்த மேலும் இரண்டு நோயாளிகள் குணமடைந்துள்ளதால் மலேசியா தொடர்ந்து இந்த நோய் எதிர்ப்பில் முன்னேற்றம் காட்டிவருவதாக மலேசியாவின் சுகாதார துறை அமைச்சர் Health Minister Datuk Seri Dr Dzulkefly Ahmad தெரிவித்துள்ளார்.

‘தி ஸ்டார்’ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் Alor Setar நகரத்தில் உள்ள Sultanah Bahiyah என்ற மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்த ஒருவரும் லங்காவியில் உள்ள Sultanah Maliha என்ற மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவரும் தற்போது இந்த நோயில் இருந்து முழுமையாக குணமடைந்துள்ளனர். அந்த இருவரும் சீனாவை சேர்ந்த 27 வயதான ஆணும், 32 வயதான ஒரு பெண்ணும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றது.