COVID – 19 – கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 73.8 % ஆக உயர்ந்துள்ளது – நூர் ஹிஷாம் அப்துல்லா

malaysia coronavirus

மலேசியாவில் தற்போது பல இடங்கள் பச்சை மண்டலங்களாக மாறி வருகின்றனர். பச்சை மண்டலம் என்பது கொரோனா தொற்று ஏதும் இல்லாத இடம் என்று கருதப்படுகின்றது. இருப்பினும் பல வாரங்கள் கடந்துவிட்ட நிலையிலும் இன்றளவும் புதிய கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. தினமும் அன்றைய தினம் ஏற்படும் பாதிப்பு மற்றும் குணமடையும் மக்களின் தகவல், அரசால் வெளியிடப்பட்டு வருகின்றது.

மலேசிய சுகாதார இயக்குனர் ஜெனரல் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில் நேற்று மட்டும் 39 பேர் புதிதாக கொரோனாவால் மலேசியாவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இது பாதிப்பு எண்ணிக்கையை 6467 ஆக உயர்த்தியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் நேற்று மட்டும் 74 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளாகவும் இதுவரை மொத்தம் 4776 பேர் இந்த நோயில் இருந்து பூரண குணமடைந்துள்ளாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது குணமடைந்தவர்களின் எண்ணிக்கையை 73.8 சதவிகிதமாக ஆக உயர்த்தி உள்ளது.

மேலும் நேற்று நல்வாய்ப்பாக யாரும் மலேசியாவில் கொரோனா காரணமாக பலியாகவில்லை என்றும், இதுவரை மலேசியாவில் கொரோனா பாதித்து இறந்தவர்களின் எண்னிக்கை 107ஆக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.