மலேசியா : இந்த நடமாட்டக் கட்டுப்பாடு வரவேற்க்கத்தக்கது – ஜே. சாலமன்

MTUC

கொரோனா பரவலை குறைக்கும் வகையில் ஏற்கனவே நிலவி வந்த பொது நடமாட்டக் கட்டுப்பாட்டை ஏப்ரல் மாதம் 28ம் தேதி வரை நீடித்து உத்தரவு வெளியிட்டார் மலேசிய பிரதமர். தற்போது இந்த முடிவை வரவேற்பதாக MTUC-வின் பொதுச்செயலாளர் ஜே. சாலமன் கூறியுள்ளார். “இருப்பினும், இந்த சூழ்நிலையில் மீண்டும் மலேசியாவில் பொருளாதாரத்தை தொடங்க சில தலைவர்கள் மற்றும் நிர்வாக முதலாளிகள் முயற்சிகளை மேற்கொள்வதாகவும், அது மிகவும் வருத்தமளிப்பதாகவும் MTUC கவலை தெரிவித்துள்ளது.

மேலும் சுகாதாரத்துறையின் ஆதரவு இன்றி நிச்சயம் எந்த ஒரு வணிகத்தையும் மீண்டும் தொடங்க MTUC ஆதரவு அளிக்காது என்றும் அவர் தெரிவித்தார். தற்போது நிலவும் இந்த அசாதாரண சூழலில் மக்களின் பாதுகாப்பே மிக முக்கியமான விஷயம் என்றும் அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். அதே சமயம் அத்தியாவசியம் அற்ற சில நிறுவனங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது, கேள்விகளை எழுப்பி உள்ளதாக அவர் கூறினார்.

கடந்த மார்ச் 18ம் தேதி கொரோனா அச்சத்தால் விதிக்கப்பட்ட பொது நடமாட்டக் கட்டுப்பாடு தற்போது மேலும் நீடிக்கப்பட்டு ஏப்ரல் 28ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.