மலேஷியா மன்னர் என்னை சந்திக்க மறுத்துவிட்டார் – முன்னாள் பிரதமர் மகாதீர்

mahatir bin mohamed

மலேசியாவின் இடைக்கால பிரதம மந்திரி மகாதீர் முகமது தான் அதிக பெருன்பான்மையை கொண்டிருந்த நிலையில் அவர் தான் மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று அனைவரும் நினைத்திருந்த நிலையில் மலேசியாவின் எட்டாவது பிரதமராக கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 1) அன்று முஹைதீன் யாசின் பதவியேற்றார்.

CNA செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி கடந்த சனிக்கிழமை இரவு, டாக்டர் மகாதீர் தனது இணையதள பக்கத்தில் 114 எம்.பி.க்களின் பட்டியலை வெளியிட்டார், அவர்கள் பிரதம மந்திரி பதவிக்கு ஆதரவளிப்பதாகக் கூறினர். 222 இருக்கைகள் கொண்ட நாடாளுமன்றத்தின் கீழ், அரசாங்கத்தை அமைக்க உங்களுக்கு 112 எம்.பி.க்கள் மட்டுமே தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

அதிக பெரும்பான்மை இருந்தபோதும் மலேஷியா மன்னர் மறுநாள் காலையில் திரு முஹைதீனை மலேசியாவின் பிரதமராக அறிவித்தார். இந்த நிகழ்விற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த மகாதீர் பின் முஹமது, தான் மன்னரை மீண்டும் மன்னரை சந்திக்க சென்றதாகவும், ஆனால் மன்னர் தன்னை சந்திக்க மறுத்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

மகாதீர் தனது ராஜினாமா கடிதத்தை மன்னரை சந்தித்து கொடுத்தபோது மன்னர் அடுத்த பிரதமர் பதவியேற்கும் வரை திரு மகாதீர் அவர்களே இடைக்கால ஆட்சி பொறுப்பில் இருப்பார் என்று கூறியது குறிப்பிடத்தக்கது