பரவும் கொரோனா – தொடரும் தைப்பூச திருவிழா : குவியும் பக்தர்கள்

thaipusam corona

கொரோனா வைரஸ் தொற்று சீனாவில் பலரை பலிவாங்கிய நிலையில் தற்போது மலேசியர் ஒருவருக்கும் பரவி உள்ளது. ஆனால் அவருக்கு தகுந்த சிகிச்சை வழங்கப்பட்டு, அவரின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. இது ஒருபுறம் இருப்பினும் மலேசியா தைப்பூச கொண்டாட்டத்தில் திளைதுள்ளது.

தைப்பூசம், வருகின்ற பிப்ரவரி எட்டாம் தேதி மலேசிய முழுவதும் குறிப்பாக பத்து குகையில் உள்ள ஸ்ரீ சசுப்பிரமணியர் கோவிலில் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இந்நிலையில் இது குறித்து பேசியுள்ள ஸ்ரீ மஹா மாரியம்மன் கோவில் தேவச்த்தான பொறுப்பாளர் ஸ்ரீ. நடராஜா, இந்த வருட கொண்டாட்டங்கள் மிகவும் சவாலான ஒன்றாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

ஆனால் இந்த நோய் தொற்று பயத்தால் வழிபாடுகளில் எந்தவித பாதிப்பும் இருக்காது என்று அவர் கூறியுள்ளார். கோவில் நிர்வாகம் மருத்துவகுழுவை எப்பொதும் தயார் நிலையில் வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் பல நிறுவனங்களிடம் நன்கொடையாக முகமூடிகளையும் கேட்டுள்ளதாக தெரிவத்தார் .

நன்கொடையாக கேட்டுள்ள முகமூடிகள் அனைத்தும் பக்தர்களுக்கு உரிய நேரத்தில் வழங்கப்படும் என்றும். வழிபாட்டிற்கும், நேர்த்திக்கடன் செலுத்துவதற்கும் வரும் பக்தர்கள் சுகாதாரத்துடன் இருக்க வலியிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.