‘கட்டுப்பாட்டை மீற வேண்டாம்..!!’ – ‘முன்பிருந்த இயக்கக் கட்டுப்பாடு மீண்டும் அமலுக்கு வரும்..?’ – இஸ்மாயில் சப்ரி

Ismail

தற்போது நடைமுறையில் உள்ள தளர்த்தப்பட்ட கட்டுப்பாடுகளை மலேசியர்கள் தொடர்ந்து புறக்கணித்தால், முன்பிருந்த இயக்க கட்டுப்பாட்டு ஒழுங்கை (MCO) அரசாங்கம் மீண்டும் அறிமுகப்படுத்த முடியும் என்று டத்துக் செரி இஸ்மாயில் சப்ரி யாகோப் தற்போது கூறியுள்ளார். தொற்று நோய்களைத் தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் சட்டம் 1988 இன் கட்டுப்பாடுகள் நாடு தழுவிய அளவில் நடைமுறையில் உள்ளன என்றும், நோய் பரவளின் அதிவேக வளர்ச்சியைத் தடுக்க முழு இணக்கத்தையும் மக்களிடம் இருந்து அரசாங்கம் எதிர்பார்க்கிறது என்றும் கூறினார்.

பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு அரசு கடந்த மே மாதம் 4ம் தேதி சில பொருளாதார துறைகளை திறக்க அனுமதி அளித்தது. இந்நிலையில் நேற்று ட்விட்டரில் 13 விநாடி ஓடும் காணொளியில், தேசா பாண்டனில் உள்ள ஒரு தொடர் உணவு நிலையத்திற்கு அருகே ஒரு பெரிய கூட்டம் ஒன்று திரண்டிருப்பதை காணமுடிந்தது. இது மக்கள் சமூக இடைவெளியை முற்றிலும் மறந்ததை காட்டுகின்றது என்று அவர் கூறினார்.

மேலும் இந்த நிலை தொடர்ந்தால் தற்போது உள்ள தளர்வுகள் நீக்கப்பட்டு மீண்டும் நடமாட்டக் கட்டுப்பாடு முன்பு போல அதிகரிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.