‘மலேஷிய நாடாளுமன்றத்தின் அமர்வு தள்ளிவைப்பு’ – மே 18ம் தேதி தொடங்க வாய்ப்பு..?

assembly

மலேசியாவில் நிலவும் அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் கொரோனா பயமும் மக்கள் வாட்டி வதைத்து வருகின்றது. இந்நிலையில் நாளை மார்ச் 9ம் தேதி தொடங்குவதாக திட்டமிடப்பட்ட நாடாளுமன்றத்தின் அமர்வு தற்போது வருகின்ற மே மாதம் 18ம் தேதிக்கு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை சபாநாயகர் மொஹமட் ஆரிஃப் எம்.டி யூசோப் கடந்த சில நாட்களுக்கு முன்பு தெரிவித்தார்.

மலேஷியா இன்று செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில், புதிய தொகுதி தொடர்பாக சில நாட்களுக்கு முன்பு தற்போதைய மலேஷியா பிரதமர் திரு. முகிதீன் அவர்களிடம் இருந்து தனக்கு ஒரு பதில் கிடைத்துள்ளது என்று அவர் கூறியதாக மலேஷியா நாளேடான பெரித்தா ஹரியன் மேற்கோளிட்டுள்ளது.

“மேலும் நாளை மார்ச் 9ம் தேதி அன்று நாடாளுமன்ற அமர்வு நடைபெறாது என்றும், மேலும் இந்த பாராளுமன்றத்தின் ஆரம்ப தேதி மே 18ம் தேதி அன்று அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று ஆரிஃப் கூறினார். ஆரம்பத்தில் நாடாளுமன்றம் மார்ச் 9 முதல் ஏப்ரல் 16 வரை அமர திட்டமிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.