தைப்பூசம் – மக்கள் வெள்ளத்தில் நிறைய காத்திருக்கும் பினாங்கு

thaipusam

தைப்பூசம், உலகம் முழுதும் உள்ள ஹிந்து மக்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் ஒரு நிகழ்ச்சி வருகின்ற பிப்ரவரி 8ம் தேதி தைபுசம் மலேசியாவில் கொண்டாப்பட உள்ளது, மலேசியாவில் வெகு விமர்சையாக கொண்டாப்படும் ஒரு திருவிழா என்பதால் மலேசியாவின் Batu Caves பகுதியில் உள்ள உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயத்தில் லட்சகணக்கில் மக்கள் வழிபாடிற்காக கூடுவர். சென்ற ஆண்டு இந்த தைபூசம் திருவிழாவின்போது சுமார் 1.6 மில்லியன் மக்கள் அங்கு கூடியதாக தகவல்கள் தெரிவிகின்றனர்.

கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்படுமோ என்று அச்சப்பட நிலையில், தைப்பூச திருவிழாவை நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது, ஆதலால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடனும் அதே சமயம் மிகுந்த கவனத்துடனும் இந்த விழாவை கொண்டாட தொடங்கி உள்ளனர். வரும் பிப்ரவரி எட்டாம் நாள் முடிவடையும் இந்த தைப்பூச திருவிழா வெகு விமர்சையாக நடக்கவுள்ளது.

இந்த முறை நடக்கவிருக்கும் தைப்பூச திருவிழாவுக்கு சுமார் இரண்டு மில்லியன் மக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகையால் மலேசிய அரசு பரவி வரும் இந்த நோயால் திருவிழாவுக்கு வரும் பக்தர்கள் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்பட கூடாது என்பதற்காக முழு எச்சரிக்கையுடன், தனி குழு அமைத்தும் செயல்பட்டு வருகின்றது.