‘பொது நடமாட்டக் கட்டுப்பாடு மீறல்..?’ – மலேசியாவில் 10 இந்தியர்கள் கைது

malaysia arrest

கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் மாதத்தில் இருந்து மலேசியாவில் பொது நடமாட்டக் கட்டுப்பாடு அமலில் உள்ளது. தற்போது நிலவுவது மூன்றாம் கட்ட கட்டுப்பாடு என்பது குறிப்பிடத்தக்கது. மக்கள் தேவை இன்றி வெளியே வருவதை தடுக்க மலேசியா முழுவதும் இந்த கட்டுப்பாடு கடுமையாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இந்த தடையை மீறியதாக கூறி 10 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘மலேசியா இன்று’ என்ற செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியின் அடிப்படையில், கடந்த செவ்வாய் என்று இரவு மேற்கு ஈப்போவின் பகுதிகளில் கொரோனா குறித்த கண்காணிப்பு பணியில் மலேசிய காவலர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள உணவு விடுதி ஒன்றில் இருந்து வந்த சத்தத்தை அடுத்து அங்கு சென்று பார்த்தபோது, அங்கு 10 இந்தியர்கள் மது அருந்திய நிலையில் உணவு உண்டுகொண்டிருந்தது தெரியாவதாக தகவல்கள் தெரிவந்துள்ளது.

அவர்கள் தங்கள் இல்லத்தில் இருந்து சுமார் 30 மீட்டர் தூரத்தில் உள்ள அந்த உணவு விடுதிக்கு வந்ததும் தெரியவந்துள்ளது. தற்போது அந்த உணவு விடுதியின் உரிமம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கைதானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகும் தகவல் வெளியாகியுள்ளது.