“மலேசியாவில் தமிழ் பள்ளிக்கூடங்கள் குறையும் அபாயம் உள்ளது” – இராகவன் கருப்பையா

malaysia school

உலக நாடுகள் பலவற்றுள் தமிழர்களும் தமிழ் மொழியும் செழித்து வளர்ந்து வருகின்றது. அதைப்போலத்தான் மலேசியாவிலும். ஆனால் மலேஷியா இன்று என்ற செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி இராகவன் கருப்பையா என்பவர் தமிழ் மொழி குறித்தும் தமிழ் பயிற்றுவிக்கும் பள்ளிகளை பற்றியும் கூறியிருப்பது பின்வருமாறு.

மலேசிய நாட்டில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் அதே சமயம் இந்த நாட்டில் தமிழ் பள்ளிகள் காலூன்றி நிற்பதற்கும் தற்சமயம் பல வழிகளில் இருந்து அச்சுறுத்தல்கள் தினம் தினம் முளைத்து வருகின்றது என்று அவர் கூறினார். இதற்கு முதல் காரணமாக அவர் கூறுவது ஆரியர் பயிற்சி கல்லூரிகளில் தமிழ் என்று பிரிவை தேர்ந்தெடுத்து படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளதாகவும், இதே நிலை நீடித்தால் தமிழ் ஆசிரியர்களுக்கான பற்றாக்குறை நிச்சயம் வரும் என்று அவர் கூறுகின்றார்.

அதே போல தமிழ் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களின் அளவு குறைந்துகொண்டே போனால் நிச்சயம் தமிழ் பள்ளிகளின் அளவும் குறையும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த நிலை நீடுக்குமானால் தமிழ் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கான பற்றாக்குறை ஏற்பட்டு அதன் பிறகு அரசே ஒன்றன் பின் ஒன்றாக தமிழ்ப் பள்ளிகளை மூடவேண்டிய சூழல் ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஆரம்ப நிலையில் பல ஆண்டுகளுக்கு முன்பு மலேசியாவில் சுமார் 888 தமிழ் பள்ளிக்கூடங்கள் இருந்தது என்றும் தற்போது 524 பள்ளிகள்தான் உள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.