சமய மற்றும் சமுதாய நிகழ்வுகளில் விதிக்கப்பட்ட தடை நீக்கம்..? – மூத்த அமைச்சர் வெளியிட்ட அறிக்கை..!!

Ismayil Sabri yakob
Photo Courtesy : malaysia.news.yahoo.com

மலேசியாவில் மீட்சிக்கான தளர்வுகள் படிப்படியாக கடந்த மே மாதத்தில் இருந்து அறிவிக்கப்பட்டு வருகின்றது. வணிக நிறுவனங்கள் பல திறக்கப்பட்டு வரும் நிலையில் பள்ளிகளும் விரைவில் திறக்க பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. சமய மற்றும் சமுதாய நிகழ்வுகளில் இடத்தின் அளவு பொறுத்து 250 பேர் வரை கூடலாம் என்ற கட்டுப்பாடு நிலவியது.

இந்நிலையில் மூத்த அமைச்சர் இஸ்மாயில் சபரி யாக்கோப் வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில் தற்போது சமய மற்றும் சமுதாய நிகழ்வுகளில் 250 பேர் என்ற அளவை நீக்கும் நேரம் வந்துவிட்டது என்றும் வரும் ஜூலை 15ம் தேதி முதல் இந்த கட்டுப்பாடு நீக்கப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

இருப்பினும் மக்கள் மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும், உருசிய சமூக இடைவெளியை மக்கள் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். உதாரணமாக மக்கள் கூடும் இடத்தில் 1000 பேர் அமர வசதி இருக்கும் நிலையில் அங்கு சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டு 800 பேர் அமர்த்தப் படவேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.