‘விதிமுறைகளை பள்ளிகள் மேன்படுத்தி கொள்ளலாம்..!!’ – துணை கல்வி அமைச்சர்

SOP for Schools

கொரோனாவில் இருந்து தற்போது மலேசிய மெல்ல மெல்ல மீண்டு வர தொடங்கியுள்ளது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக பல பொருளாதார துறைகள் திறக்கப்பட்டு வருகின்றது. அதே சமயம் இந்த வருடம் அரசு தேர்வு எழுத்தவுள்ள படிவம் ஐந்து மற்றும் படிவம் ஆறு பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புக்கள் நடந்து வருகின்றன.

தற்போது இதன் அடுத்த கட்டமாக SOP (Strand Operating Procedure) எனப்படும் விதிக்கப்பட்டுள்ள சீரான விதிமுறைகளை பள்ளிகள் தற்போது மேன்படுத்திக்கொள்ளலாம் என்று துணை கல்வி அமைச்சர் முஸ்லீமின் யாஹா தெரிவித்துள்ளார். மேலும் மாணவர்களின் நலனும் நிச்சயம் பாதிக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மலேசியாவில் அண்மைக்காலமாக புதிய தொற்றுகளின் அளவு குறைந்து வருகின்றது. மேலும் வரும் ஜூலை மாதம் 1ம் தேதி முதல் திரையரங்குகள் உள்ளிட்ட பொழுதுபோக்கு துறைகள் முறையான கட்டுப்பாடுகளுடன் மீண்டும் தொடங்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.