‘1180 இந்தியர்கள் உள்பட 18,355 சட்ட விரோத குடியேறிகள் கைது’ – மலேசிய குடிநுழைவுத்துறை..!

illegal migrants in malaysia
Picture Courtesy straitstimes.com

கடந்த சில மாதங்களாக மலேசிய அரசு மற்றும் குடிநுழைவுத்துறை அதிகாரிகள் உரிய ஆவணங்கள் இன்றி மலேசியாவில் தங்கியுள்ள பிற நாடுகளை சேர்ந்த தொழிலார்களை கைது செய்து வருகின்றனர். மஸ்ஜித் இந்தியாவில் தொடங்கி பல இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகின்றது. அதே சமயம் உரிய ஆவணங்கள் இல்லாத பல நூறு வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பெட்டாலிங் ஜெயா பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடிநுழைவுத்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் இந்தியர்கள் உள்பட சுமார் 200 சட்டவிரோத குடியேறிகள் கண்டுபிடிக்கப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டுட்டள்ளனர். இது குறித்து பேசிய குடிநுழைவுத் துறையின் தலைமை இயக்குநர் பெட்டாலிங் ஜெயாபகுதியில் இருந்து இந்தியா, பாக்கிஸ்தான், இந்தோனேஷியா போன்ற நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக குடியேறிய 200 பேர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் அதில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் இருந்து வந்தவர்களுக்கு கொரோனா சோதனை நடப்படட்டது என்றும், அதில் யாருக்கும் நோய் தொற்று இல்லை என்றும் அவர் தெரிவித்தார். அவர்கள் அனைவரும் குடிநுழைவுத் துறை தடுப்புக் காவலுக்கு அழைத்துச் செல்லப்பட்டாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் இந்த வருட தொடக்கத்தில் இருந்து சுமார் 18,000க்கும் அதிகமான சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக குடிநுழைவு துறையினர் தெரிவித்துள்ளனர். இதில் 1180 இந்தியர்களும் அடக்கம்.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

?? Facebook – https://www.facebook.com/tamilmicsetmalaysia/

?? Twitter      – https://twitter.com/malaysiatms