மலேசியா : பசார் போரோங்கில் தொழிலார்கள் பற்றாக்குறை பெரும் பிரச்சனையாக உள்ளது – வணிகர்கள்..

Pasar Borong

மலேசியாவில் ஏற்கனவே கோலாலம்பூர் மொத்த விற்பனை சந்தையில் உள்ளூர் தொழிலார்கள் சம்பளம் குறித்து பல கேள்விகள் கேட்பதாகவும், அவர்கள் செய்யும் வேலையை அவர்களே தேர்ந்தெடுக்க விரும்புவந்தாகவும் வியாபாரிகள் மற்றும் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். அதனால் உள்ளூர் தொழிலார்கள் மீது பெரிய அளவில் நாட்டத்தை தாங்கள் செலுத்தவில்லை என்றும் அவர்கள் கூறியதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் செலாயாங் உள்ள பசார் போரோங்கில் தொழிலார்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக வணிகர்கள் தெரிவிக்கின்றனர். உள்ளூர் தொழிலார்கள் ஒரு நாளைக்கு 100 வெள்ளி சம்பளம் கொடுத்தாலும் வேலை செய்யவருவதில்லை என்று கோலாலம்பூர் மொத்த காய்கறி வியாபாரிகளின் சங்கத் தலைவர் வோங் பெங் ஃபாட் கூறியுள்ளார். கொரோனா பரவலால் அந்நிய தொழிலார்கள் தொழில் செய்யவும் அங்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த தொழிலார்கள் பற்றாக்குறையால் வியாபாரம் பெரிய அளவில் பாதித்து வருவதாக அங்குள்ள வணிகர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.