“மலேசியாவில் சீலா மீன்’’ – அசத்தும் வியாபாரம், மகிழ்ச்சியில் ராமேஸ்வரம் மீனவர்கள்

shila fish

ராமேஸ்வரம் அருகே பாம்பன் பகுதி மீனவர்கள் வலைகளில் உயர்தர மீனாக கருதப்படும் சீலா மீன்கள் பிடிபட்டுள்ளன.

அதில் 4 அடி நீளம் வரை உள்ள உயர்தர சீலா மீன்கள் சுமார் 150 கிலோ வரை பிடிபட்டுள்ளது. மேலும், இந்த சீலா மீன்களுக்கு சிங்கப்பூரில் அதிக வரவேற்பு உள்ளது, அதே போல் மலேசியா நாட்டிலும் இந்த மீனுக்கு அதிக வரவேற்புள்ளது.

மேலும், சிறிய மீன்களுக்கு 250 ருபாய் முதல் 300 வரையிலும், பெரிய மீன்களுக்கு கிலோ 400 முதல் 450 வரை விற்பனையாவதகவும் தகவல்கள் தெரிவிகின்றன. இதன் காரணமாக அதிக லாபம் கிடைப்பதாகவும், கூடுதலாக பாறை, கட்டா போன்ற இருபது வகையான மீன்கள் அதிகம் கிடைப்பதாகவும் மீனவர்கள் மகிழ்ச்சியாக தெரிவித்தனர்.