மலேசியா : கடுமையான கட்டுப்பாடுகளுடன் மீண்டும் இயங்கும் ‘செலாயாங் (Selayang) சந்தை’

Selayang market

கொரோனா பரவலால் கடுமையான கட்டுப்பாடுகள் நிலவி வரும் இந்த நிலையில், மலேசியாவில் மேலும் இரண்டு வாரங்களுக்கு அதாவது மே மாதம் 12ம் தேதி வரை மீண்டும் பொது நடமாட்டக்க கட்டுப்பாடு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நான்கு நாட்களாக நடைபெற்ற தூய்மை பணிக்கு பிறகு மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது சிலாங்குர் பகுதியில் அமைந்துள்ள செலாயாங் மொத்த வியாபார சந்தை.

கடுமையான கட்டுப்பாடுகளுடன் இந்த சந்தை திறக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார். சமூக இடைவெளியை மக்களும் வியாபாரிகளும் அவசியம் கடைப்பிடக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகள் மீறப்பட்டால் நிச்சயம் மீண்டும் சந்தை பூட்டப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

சந்தைக்கு வரும் லாரிகள் அட்டவணைப்படியே அனுமதிக்கப்படும் என்றும், மேலும் லாரி ஓட்டுனர்கள், அங்கு கூடும் பணியாளர்கள், வியாபாரிகள் என்று அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் அதிகாரிகள் கூறினார்.