‘விடியற்காலையில் செலயாங் பகுதியில் நடந்த சோதனை’ – ’54 இந்தியர்கள் உள்பட 1368 பேர் கைது..?’

Kuala Lampur

Selayang, மலேசியாவில் சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்ட ஒரு இடம் மேலும் கோம்பர்க் மாவட்டத்தில் தலைநகராக விளங்குகின்றது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு மஸ்ஜித் இந்தியாவில் நடத்தப்பட்டதை போல ஒரு அதிரடி சோதனை இந்த இடத்திலும் நடப்பட்டதுள்ளது. கொரோனா பரவலை தொடர்ந்து பல அதிரடி முடிவுகளை மலேஷியா அரசு அனுதினமும் எடுத்து வருகின்றது. இந்நிலையில் selayang பகுதியில் நடத்தப்பட்ட இந்த அதிரடி சோதனை அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோலாலம்பூர் காவல்துறையின் தலைவர் மஸ்லான் லாசிம் மற்றும் குடிவரவுத் துறை அதிகாரிகள் தலைமையில் இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மஸ்ஜித் இந்தியாவில் நடந்தது போலவே உரிய ஆவணங்கள் இன்றி அந்த இடத்தில் யாரேனும் தங்கியுள்ளனரா என்பதை அறியவே இந்த சோதனை நடத்தப்பட்டகாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த சோதனையில் செலயாங் மொத்த சந்தையில் விடியற்காலையில் குடிநுழைவுத்துறை மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் 1368 பேர் கைது செய்யப்பட்டதாகவும் அதில் 54 பேர் இந்தியர்கள் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.