‘மலேசியாவில் ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்க வாய்ப்புள்ளது..?’ – நூர் ஹிஷாம் அப்துல்லா

noor hisham abdullah

மலேசியாவில் நேற்று ஒரே நாளில் சுமார் 103 பேருக்கு புதிதாக நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. ஆனால் அவர்களில் 84 பேர் வெளிநாட்டவர்கள் என்றும், 7 பேர் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் என்றும் அதே சமயம் உள்ளூரில் உள்ள 12 பேருக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று தெளிவுபடுத்தினார் சுகாதார அமைச்சக இயக்குநர் ஜெனரல் நூர் ஹிஷாம் அப்துல்லா.

இந்நிலையால் கடந்த சில நாட்களாக உள்ளூரில் ஏற்படும் தொற்று மிகவும் குறைந்தே காணப்படுகின்றது. சரியாக சொல்லப்போனால் 15-க்கும் குறைந்த அளவிலேயே புதிய தொற்றுகள் கண்டறியப்பட்டு வருகின்றன. இந்நினையில் ஜூன் மாதம் முதல் வாரத்திலும் இதே நிலை தொடர்ந்தால் கல்வி நிறுவனங்கள் மற்றும் மேலும் சில பொருளாதார நிறுவங்கள் திறக்க வாய்ப்புள்ளது என்றும் நூர் ஹிஷாம் தெரிவித்துள்ளார்.

தற்போது நடைமுறையில் உள்ள இயக்கக்கட்டுப்பாடு வரும் ஜூன் மாதம் 9ம் தேதி முடிவுக்கு வரும் நிலையில் பள்ளிகள் மற்றும் பிற நிறுவனங்கள் திறப்பது குறித்து அன்று அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.