‘நிபந்தனையுடன் சராவாக் பகுதியில் முடித்திருத்த கடைகள் திறக்கலாம்..!!’ – மாநில துணை முதல்வர்

Sarawak Salon

மலேசியாவில் சில தளர்வுகளுடம் கடந்த மே மாதத்தின் தொடக்கத்தில் சில பொருளாதார நிறுவனங்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் மலேசியா முழுவதும் முடித்திருந்த கடைகள் திறக்க தற்போதைக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என்று கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட்டது. ஜெர்மனி மற்றும் அமெரிக்கா போன்ற ஐரோப்பிய நாடுகளில் நோய் பரவலுக்கு சலூன் கடைகள் பெரிய காரணமாக இருந்ததை சுட்டிக்காட்டி இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக மலேசியாவில் நோய் தொற்றின் அளவு குறைந்து வருவதை அடுத்து தற்போது மலேசியாவின் ‘சராவாக்’ பகுதியில் மீண்டும் சலூன் கடைகளை திறக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் ஜூன் 9ம் முதல் கடைகள் திறக்கப்படலாம் என்று அம்மாநில துணை முதல்வர் டத்தோ அமார் டோக்லாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் மசாஜ் மற்றும் முக ஒப்பனைக்கு அனுமதி இல்லை என்றும் அவர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். மேலும் முடிதிருத்த கடைகளுக்கு தனியாக SOP விரைவில் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.