மலேசியா : ‘ஊதியமில்லா விடுப்பு – கலக்கத்தில் மலிண்டோ ஏர் தொழிலாளர்கள்..?’

malindo air

எங்கும் திரும்பினாலும் மக்கள் கேட்கும் ஒரே செய்தி கொரோனா நோய் குறித்த செய்திகளே, உலகமே இந்த தொற்று குறித்து மிகப்பெரிய அச்சத்தில் ஆழ்ந்துள்ளது. சீனாவில் உருவெடுத்த இந்த நோய் தற்போது சால்மோன் தீவுகள் மற்றும் மைக்குரேனேசிய போன்ற நாடுகளை தவிர உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் பரவி உள்ளது. இந்த நோய் தொற்று காரணமாக உயிரிழப்புகள் தொடர்ந்து நிகழ்ந்து வரும் நிலையில் பல நாடுகளின் பொருளாதாரம் பெரிய அளவில் சரிந்து வருகின்றது. இந்நிலையில் நேற்று ஜப்பான் பிரதமர் தங்களது நாட்டில் முக்கிய நகரங்களில் அவரச நிலையை பிரகடனப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் மலேசியாவை தலைமையாக கொண்டு விளங்கும் மலிண்டோ ஏர் விமான சேவை நிறுவனம் தன்னிடம் வேலை செய்யும் சில ஊழியர்களுக்கு சம்பளம் இல்லாத விடுப்பு அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் மலிண்டோ ஏர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு. முஷாபிஸ் முஸ்தபா பக்ரி, தங்களது நிறுவனத்தில் பணிபுரியும் சில நபர்கள் மட்டுமே பணிக்கு வர வேண்டும் என்றும், அவ்வாறு வருபவர்களுக்கும் தினசரி ஊதியம் தரப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

பரவி வரும் கொரோனா காரணமாக பல இக்கட்டான சூழலை மலேசிய மக்கள் சந்தித்து வருகின்றனர்.