மலேசியாவில் தைபூசம், விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் – மிரட்டும் கொரோனா 

thaipusam

தைபூசம், உலகம் முழுதும் உள்ள ஹிந்து மக்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் ஒரு நிகழ்ச்சி. வருகின்ற பிப்ரவரி 8ம் தேதி தைபுசம் மலேசியாவில் கொண்டாப்பட உள்ளது, மலேசியாவில் வெகு விமர்சையாக கொண்டாப்படும் ஒரு திருவிழா என்பதால் மலேசியாவின் Batu Caves பகுதியில் உள்ள உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயத்தில் லட்சகணக்கில் மக்கள் வழிபாடிற்காக கூடுவர். சென்ற ஆண்டு இந்த தைபூசம் திருவிழாவின்போது சுமார் 1.6 மில்லியன் மக்கள் அங்கு கூடியதாக தகவல்கள் தெரிவிகின்றனர்.

இந்த தைபூச திருவிழாவின் போது மலேசிய மக்கள் மட்டும் இன்றி வெளிநாட்டில் இருந்தும் பல பக்தர்கள் மலேசியாவை நோக்கி வருவது வழக்கம், அகையால் WHO எனப்படும் World Health Organization வழிகாட்டுதலின்படி மலேசியா அரசு தைபூசம் போன்று மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிக்காமல் இருக்க பல கட்டுபாடுகளை விதிக்க உள்ளது.

இதுவரை மலேசியர்கள் யாருக்கும் இந்த நோய் தொற்று இல்லை என்றபோதும் மலேசியாவிற்கு சுற்றுலா வந்த சில சீன பயணிகளுக்கு இந்த தொற்று உள்ளது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் தனிமை படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கபடுகிறது. இந்நிலையில் தைபூசம் போன்ற லட்ச கணக்கில் மக்கள் கூடும் திருவிழாக்களில் மிக கவனத்துடன் மலேசியா அரசு செயல்படும் என்று துணை பிரதமர் வான் இஸ்மாயில் கூறியுள்ளார்.