ரோம் நகரில் சிக்கி தவிக்கும் மலேசியர் – பராமரிப்பு பொருட்கள் அனுப்பிய தூதரகம்

corona rome

உலக நாடுகள் பல தற்போது பரவி வரும் கொரோனா நோயினால் நிலைகுலைந்து உள்ளது. இந்நிலையில் சீனாவிற்கு அடுத்தபடியாக கொரோனாவால் அதிகம் பாதிப்பையும் அதிக உயிரிழப்பையும் சந்தித்துள்ள நாடு தான் இத்தாலி. இந்த அசாதாரண சூழல் அந்த நாடு முழுவதும் முடங்கிப்போய் உள்ளது. இந்த சூழ்நிலையில், ​​ரோம் நகரில் உள்ள மலேசிய தூதரகம் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிவப்பு மண்டல பகுதியாக திகழும் இடத்தில் வசிக்கும் யூனுஸ் என்று அழைக்கப்படும் மலேசியருக்கு ஒரு பராமரிப்பு பெட்டகத்தை அனுப்பி உள்ளது. இதை அவர்தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

“ரோமில் உள்ள மலேசிய தூதரகம் வடக்கு இத்தாலியில் கொரோனாவின் பாதிப்பு அதிகம் உள்ள சிவப்பு மண்டலத்தில் வசிக்கும் நபருக்கு ஒரு பராமரிப்பு பெட்டகத்தை அனுப்பியது. அதில் கை சுத்திகரிப்பு, துடைப்பான்கள், கிருமிநாசினி, முகமூடிகள், மேகி, துரியன் டோடோல், செரண்டிங், பிரஹிம்ஸ் ரெண்டாங், கை சுத்திகரிப்பு போன்றவற்றைக் வைத்து அனுப்பியுள்ளது. தூதரகத்தின் இந்த செயல் அனைவராலும் வெகுவாக பாராட்டப்பட்டு வருகின்றது.

இத்தாலி பிரதமர் கியூசெப் கோன்டே கடந்த திங்கள் அன்று பேசுகையில், இந்த நோய் தொடர்ந்து பரவாமல் இருக்கவே நாடு முழுவதும் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.