மலேசியாவில் கொரோனா : ‘இந்த ஆண்டு ரமலான் சந்தை இல்லை..?’ – புசார் அமிருதீன் ஷாரி

selangor

மலேசிய முழுவதம் இரண்டாம் கட்ட பொது நடமாட்டக் கட்டுப்பாடு நேற்று முதல் அமலில் வந்துள்ளது. இன்னும் பெரிய அளவில் மலேசியாவில் கொரோனாவின் தாக்கம் குறையாத காரணத்தால் எல்லா வருடமும் நடக்கும் ரமலான் பஜார் செயல்பாட்டை இந்த ஆண்டு ரத்து செய்ய மாநில நிர்வாக சபைக் கூட்டம் நேற்று முடிவு எடுத்துள்ளதாக சிலாங்கூர் மந்திரி புசார் அமிருதீன் ஷாரி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார். மேலும் அரசு இந்த நிகழ்வில் தலையிட்டு ரமலான் சந்தையை நடத்த அனுமதி தந்தால் நிச்சம் இந்த சந்தையை நடத்தலாம் என்றும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மேலும் ரமலான் சந்தையை ஆன்லைன் மூலம் நடத்த சாத்தியக்கூறுகள் இருக்கிறதா என்பதை குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். தற்போது நிலவும் இந்த பொது நடமாட்டக் கட்டுப்பாடு மலேசியாவிற்கு தற்போது மிகவும் தேவையான ஒன்று என்றும் நிச்சயம் இந்த ரமலான் சந்தை குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மக்கள் தேவை இன்றி வெளியில் வராமல் சிறந்த முறையில் இந்த கட்டுப்பாட்டை கடைபிடிப்பது ஒன்றே இந்த நோயில் இருந்து விரைவில் விடுபட ஒரே வழி என்று அரசு அனுதினமும் அறிவித்து வருகின்றது.