சூடு பிடிக்கும் மலேசிய அரசியல் – மீண்டும் மன்னரை சந்திக்கிறார் இடைக்கால பிரதமர்

Mahathir

மலேசியாவின் இடைக்கால பிரதமர் டாக்டர் மகாதீர் முகமத், மீண்டும் இன்று காலை மலேசிய அரசரை சந்திக்க உள்ளார். மலேசியாவில் அரசியல் குழப்பங்கள் ஐந்தாவது நாளை எட்டியுள்ள இந்த நிலையில் இடைக்கால பிரதமர் அரசரை சந்திக்க உள்ளது பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று இடைக்கால பிரதமர் டாக்டர் மகாதீர், அடுத்த இரண்டு நாட்களில் என்ன நடக்கும் என்பதை ஊகித்து, கட்சி எல்லைகள் இல்லாத ஒரு நல்ல அரசாங்கத்தை அமைக்க வாய்ப்புள்ளது என்று கூறினார்.

இந்நிலையில் மலேசியாவின் சோசலிஸ்ட் கட்சி (பிஎஸ்எம்) தங்கள் பிரதமரை வெளிப்படையாக பெயரிட்ட பாக்காத்தான் நடவடிக்கையை வரவேற்றுள்ளது,. மேலும் முன்னால் பிரதமரும் தற்போதைய இடைக்கால பிரதமருமான மகாதீர் தற்போது பதவியை விட்டு விலகி, அமைதியான மாற்றத்தை ஏற்படுத்துவது ஒரு சிறந்த வலதுசாரி அரசியல்வாதியின் மிகவும் விவேகமான செயல் என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் இன்று மாலை சுமார் 3 மணி அளவில் அனைத்து கட்சியின் தலைவர் மற்றும் உயர் சபை உறுப்பினர்களுடன் சிறப்பு கூட்டம் நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே மலேசிய அரசரை சந்தித்து பேசிய இடைக்கால பிரதமர், தற்போது மீண்டும் அரசரை சந்திக்க உள்ளது, மலேசிய அரசியல் நிகழ்வில் பெரிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.