மலேசியா – ‘காய்கறி, கோழி போன்றவற்றின் விலை வழக்கத்திற்கு அதிகமாக உயர்கிறது..?’ – லீ சீன் சுங்

SOP in Malaysia

மலேசியாவில் உணவு பாதுகாப்பை எதிர்கொள்வதில் அரசு சரிவர செயல்படவில்லை என்று சட்டமன்ற உறுப்பினர் லீ சீன் சுங் அண்மையில் கூறினார். இந்நிலையில் தற்போது மலேசியாவில் பெரும்பாலான இடங்களில் கோழி மற்றும் பல அத்யாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது என்று தற்போது மீண்டும் அரசின் மீது குற்றம்சாட்டியுள்ளார். சிலாங்கூர் மற்றும் பேராக் போன்ற இடங்களிலும் தற்போது விலை அதிகமாகிக்கொண்டே உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

உதாரணமாக கிளந்தான் கோத்தா பாருவில் இதுவரை கிலோவிற்கு RM3ஆக இருந்த கோழியின் விலை தற்போது இரண்டு மடங்கிற்கு அதிகமாக RM7 வரை விற்பனை ஆவதாக அவர் கூறுகின்றார். மேலும் சுமார் RM1 பில்லியன் மதிப்புள்ள உணவு பாதுகாப்பு நிதியை பயன்படுத்துவதற்கான திட்டம் அரசிடம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

தற்போது நிலவும் இக்கட்டான சூழலில் பலர் சரியான வேலை மற்றும் ஊதியம் இல்லாத நிலையில் இந்த விலையேற்றம் மக்களை பாதிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.