COVID – 19 : ‘கர்ப்பிணிப் பெண்ணுக்கு நோய் தொற்று..!!’ – Kelantan பகுதியில் மீண்டும் ஒரு பாதிப்பு..

Pregnant lady

கோவிட் 19, உலகை கடந்த 6 மாத காலமாக அச்சுறுத்தி வரும் இந்த கொடிய வைரஸ் கிருமிக்கு இதுவரை பல லட்சம் பலியாகி உள்ளனர். மலேசியாவை பொறுத்தவரை இதுவரை 100க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். இதுஒருபுரம் இருக்க மலேசியாவில் இருந்து முழுமையாக இந்த நோயினை அழிக்க அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் பாதிப்பு நிலவரங்களை சரிவர கணக்கிட பச்சை, மஞ்சள் மற்றும் சிவப்பு என்ற வண்ணங்களில் இடங்களை பிரித்து மலேசிய அரசு.

இந்நிலையில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக ஒரு பாதிப்புகூட இல்லாமல் பச்சை மண்டலமாக திகழ்ந்து வந்த Kelantan தற்போது மீண்டும் தனது முதல் பாதிப்பை சந்தித்துள்ளது. கடந்த மே 15ம் தேதி தனது இரண்டாவது பிரசவத்திற்காக சிலாங்கூரில் இருந்து தனது சொந்த ஊருக்கு திரும்பிய கர்பிணி பெண்ணுக்கு தற்போது தொற்று உறுதியாகி உள்ளது.

ஆனால் அந்த நோயாளி சிலாங்கூரில் இருந்து தனது சொந்த ஊருக்கு பயணத்தை மேற்கொண்டபோது அவருக்கு இருமல், காய்ச்சல் மற்றும் சளி போன்ற எந்தவித அறிகுறியும் இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றது.