‘மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும்’ – ‘மலேசிய பிரதமருக்கு கோரிக்கை விடுத்த டாக்டர் சேவியர் ஜெயக்குமார்’

xavier jayakumar

கடந்த மார்ச் 16 அன்று ஊரடங்கிற்கு பின்னர் மீண்டும் தற்போது மலேசியா மெல்ல மெல்ல தனது அன்றாட பணியை தொடங்க தொடங்கியுள்ளது. இன்று முதல் தக்க பாதுகாப்புடன் பொருளாதார துறைகள் செயல்படலாம் என்று அரசு அறிவித்தது. இந்நிலையில் அரசு மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று தனது தரப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளார் Kuala Langat நாடாளுமன்ற உறுப்பினரான டத்தோ டாக்டர் சேவியர் ஜெயக்குமார் அவர்கள்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பல வாரங்களாக மக்கள் வீட்டில் முடங்கி கிடந்தது செய்த தியாகத்திற்கு பலன் தருவதாக தான் இந்த ‘தடை நீக்கம்’ அமைய வேண்டும் என்றும் மாறாக மேலும் அவர்களை துன்பத்தில் ஆழ்த்த கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் மக்களுக்கு இருக்கும் சில கேள்விகளுக்கு அரசு பதிலளிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த திடீர் பொது நடமாட்டக் கட்டுப்பாடு நீக்கத்தால் சிங்கப்பூர், ஜெர்மனி போன்ற நாடுகளில் ஏற்பட்ட இரண்டாம் கட்ட பாதிப்பதை போல இங்கு ஏற்படாத..? என்று மக்கள் வினைவுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது போல பல கேள்விகள் மக்கள் மனதில் இருப்பதாகவும், அவை அனைத்தையும் மனதில் கொண்டு மக்களை காக்கும் நோக்கில் மலேசிய அரசு செய்லபட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.