“மக்கள் தவறான செய்திகளை பரப்ப வேண்டாம்” – மலேசியா மன்னர்

malaysian king

கொரோனா தொற்று காரணமாக தற்போது நிலவி வரும் இந்த அசாதாரண சூழ்நிலையில் மலேஷியா மக்கள் மிகவும் குழம்பிப்போய் உள்ளனர். தங்களுடைய அத்யாவசிய தேவைகளை வாங்க கடைகளில் குவிகின்றனர். இந்நிலையில் மக்கள் தற்போது விதிக்கப்பட்டிருக்கும் இந்த பொதுநடமாட்ட கட்டுப்பாட்டை தங்கள் தலையாய கடமையாக எண்ணி மக்கள் கடைபிடிக்க வேண்டும் என்று மலேஷியா மன்னர் தெரிவித்துள்ளார்.

அத்தியாவசிய பொருட்களின் இருப்பு போதுமான அளவு இருப்பதால் மக்கள் யாரும் அதைக்குறித்து அச்சமுற வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த நேரத்தில் மக்கள் தேவையற்ற வந்தந்திகளை பரப்பாமல் இருப்பது மிகவும் அவசியம் என்றும் அவர் கூறினார். பொது நிகழ்வுகள் குறிப்பாக திருமண நிகழ்வுகளை சற்று தள்ளிவைக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஒவ்வொரு தனி மனிதனும் தன்னுடய சுத்தத்தை கடைபிடிக்க வேண்டும் என்றும், பிற மனிதர்களை சந்திக்கும்போதும் முறையான இடைவெளி விட்டு இருப்பதையும் உறுதி செய்துகொள்ளுமாறு மலேசியா மன்னர் தெரிவித்தார். மலேசியாவை பொறுத்தவரை கடந்த மூன்று மாதங்களில் இந்த கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 900 என்று உலக சுகாதார மையமான WHO தெரிவித்துள்ளது.