பினாங்கு : ‘ஆலயங்களை திறக்க வேண்டாம்..!!’ – அரவாரியத் தலைவர் பேராசியர் டாக்டர் பி. ராமசாமி

Pennag Temple

மலேசியாவில் கடந்த சில தினங்களாக குறைந்த அளவில் பாதிப்பு ஏற்பட்டு வருவதால் ஜூன் மாதத்தில் மலேசியாவில் உள்ள 80-க்கும் அதிகமான தொற்று முற்றிலும் இல்லாத பச்சை மண்டலங்களில் உள்ள இந்து கோயில்கள் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இஸ்லாமியர்கள் அல்லாத பிற மதம் சார்ந்த வழிபட்டு தளங்கள் வரும் ஜூன் 10ம் தேதி முதல் திறக்கப்படும் (பச்சை மண்டலங்களில் மட்டும்) என்று மூத்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் அண்மையில் கூறினார்.

ஆனால் தற்போது பினாங்கு பகுதியில் உள்ள இந்து அரவாரியம், கோவில்களை திறக்க வேண்டாம் என்று கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து பேசிய அரவாரியத்தின் தலைவர் பேராசியர் டாக்டர் பி. ராமசாமி, பச்சை மண்டலமாக தற்போது திகழும் பினாங்கு இந்த நடவடிக்கையால் மீண்டும் தொற்று பெறக்கூடும் என்று தெரிவித்துள்ளார்.

ஆகையால் நடைபெறவிருக்கும் COVID 19 கூட்டத்தில் ஆலயங்களை தற்போது திறக்கக்கூடாது என்று வலியுறுத்தப்போவதாக அவர் கூறியுள்ளார். பினாங்கு பகுதியில் சுமார் 19 ஆலயங்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.