கோலாலம்பூர் – பிகேஆர் கட்சியின் உதவித் தலைவர் மீது தாக்குதல்

Kuala Lumpur

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் பிகேஆர் என்ற கட்சியின் உதவித் தலைவர் திரு. தியன் சுவானைத் தாக்கியவரை தற்போது மலேசிய போலிசார் கைது செய்துள்ளனர். தி நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் என்ற செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பெட்டாலிங் ஜெயாவில் உள்ள பிகேஆர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்த அந்த கட்சியின் கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு, அந்த இடத்தில் இருந்து வெளியேறிய தியன் சுவாவை பிகேஆர் கட்சியை சேர்ந்த ஆதரவாளர் ஒருவர் குடிநீர் பாட்டிலை கொண்டு தாக்கியதாக கூறப்படுகிறது.

பிகேஆர் கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் அஸ்மின் அலிக்கு ஆதரவாக இருந்ததாக சந்தேகம் அடைந்து அந்த கட்சியின் ஆதரவாளர்கள் தியன் சுவாவை தாக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இந்த நிகழ்வானது நடந்தபோது அருகில் இருந்தவத்தவர்கள் இடைமறித்து தடுத்தால் அங்கு நிலவிய கலவர சூழல் அமைதியானது. ஏற்கனவே முன்னாள் பிரதமர் ராஜினாமா செய்து மீண்டும் அவரே இடைக்கால பிரதமராக அறிவிக்கப்பட்டு பின்பு புதிய பிரதமர் மலேசியாவில் பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டின் இறுதியில் இருந்தே மலேசியாவின் அரசியலில் ஒரு குழப்பமான சூழ்நிலையே நிலவி வருகின்றது. இதனிடையே மாண்புமிகு மலேசிய மன்னரை அவமதிக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிட்டதாக கூறி சிலரை மலேசிய போலீசார் கைது செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.