‘தனிமைப்படுத்துதலுக்கான செலவைச் ஏற்க வேண்டும்’ – ‘புதிய அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்’

Ismail

அனுதினம் மலேசியாவில் பல புதிய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றது. இந்நிலையில் வரும் ஜூன் 1ம் தேதி முதல் மலேசியாவிற்குள் நுழையும் அனைவருமே கட்டாய தனிமைப்படுத்துதலுக்கான செலவைச் ஏற்க வேண்டியிருக்கும் என்றும், மேலும் அவர்கள் ஒப்புதல் கடிதம் ஒன்றிலும் கையெழுத்திட வேண்டும் என்றும் பாதுக்காப்பு துறை அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் கூறியுள்ளார்.

மேலும் மலேசியர்கள் தனிமைப்படுத்துதலுக்கான பாதி செலவை செலுத்துவார்கள் என்றும், அதே நேரத்தில் மலேசிய குடிமக்கள் அல்லாதவர்கள் தனிமைப்படுத்துதலுக்கான முழு செலவையும் ஏற்கவேண்டும் என்று அவர் அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வு வரும் ஜூன் மாதம் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் முக்கிய குறிப்பாக திரு இஸ்மாயில் சப்ரி கூறியபோது, “மலேசிய குடிமக்கள் ஒரு நாளைக்கு RM150 ($ 48.75) என்ற முழு கட்டணத்தில் 50 சதவீதத்தை செலுத்த வேண்டும் என்று தேசிய பாதுகாப்பு கவுன்சில் முடிவு செய்துள்ளது என்று அவர் கூறியுள்ளார்.