‘மழலையர் பள்ளிகள் மற்றும் நர்சரிகள் திறக்கலாம்..?’ – புதிய அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்

ismayil

மலேசியாவில் அண்மைக்காலமாக கொரோனாவின் தொற்று குறைந்த அளவில் காணப்படுகின்றது என்பது மிகவும் சிறந்த செயலக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஜூன் மாதம் 10 முதல் ஆகஸ்ட் மாதம் 31 வரை மலேசியாவில் மீட்சிக்கான நடமாட்ட ஆணையின் கீழ் படி படியாக பள்ளிகள் திறக்கப்படும் என்று சில தினங்களுக்கு முன்பு மலேசிய பிரதமர் அறிவித்ததன் அடிப்படையில் புதிய முடிவு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார் சுகாதாரத்துறை அமைச்சர் இஸ்மாயில் சபரி யாகோப்.

மலேசியாவில் மழலையர் மற்றும் நர்சரி பள்ளிகள் வருகின்ற ஜூலை 1ம் தேதி திறக்கப்படும் என்று அவர் அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார். பள்ளிகளை திறப்பதற்கு முன்பு அனைத்து பள்ளிகளிலும் சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் நேற்று அறிவித்தார். மலேசியாவில் கடந்த சில வாரங்களாக நோய் தொற்றின் அளவு குறைத்து வருவதால் பொருளாதர தரத்தை அதிகரிக்க அண்மையில் மலேசியாவில் பல பொருளாதார துறைகள் திறக்கபட்டடது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த நிகழ்வு குறித்த “விரிவான (SOP) கல்வி அமைச்சகத்தால் விரைவில் அறிவிக்கப்படும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த அறிவிப்பை அமைச்சர் நேற்று புத்ராஜெயாவில் நடந்த கோவிட்-19 தினசரி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.