‘உலகளவில் வெளியான சிறந்த மருத்துவர்கள் பட்டியல்’ – அசத்திய நூர் ஹிஷாம் அப்துல்லா

three doctors

கொரோனா வைரஸ் காரமனாக முதல் தொற்று மலேசியாவில் கண்டறியப்பட்ட நாள் முதல், தன்னுடைய அயராத பணியை மலேசிய நாட்டிற்கு அளித்து வருகின்றார் சுகாதார அமைச்சகத்தின் இயக்குனர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா. தினமும் மலேசியாவில் சுமார் 11,500 பேருக்கு கொரோனா தொற்று குறித்த சோதனை நடத்தப்படுகிறது. அதே சமயம் இயக்குனர் ஜெனரல் நேற்று வெளியிட்ட அறிக்கையில் மேலும் ஐந்து புதிய லேப் திறக்க உள்ளதாக கூறினார்.

இவ்வாறு சிறந்த முறையில் அவர் பணியாற்றி வரும் நிலையில், சீனாவை சேர்ந்த CGTN எனப்படும் China Global TV Network என்ற நிறுமவம் கொரோனா தொற்றுநோயைக் கையாளும் உலகின் தலை சிறந்த முதல் முதல் மூன்று மருத்துவர்களில் ஒருவராக மலேஷிய சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லாவை குறிப்பிட்டுள்ளது.

இந்த பட்டியலில் அமெரிக்காவின் Dr Anthony Fauci முதலிடத்திலும், நியூஸிலாந்தின் Ashley Bloomfield இரண்டாம் இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அறிஞர்கள் ஆய்வுப்படி மலேசியாவில் ஏப்ரல் மாதத்தின் நடுப்பகுதியில் சுமார் 6500-க்கும் அதிகமான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவார்கள் என்று கணக்கிடப்பட நிலையில் 5100-க்கும் குறைவான அளவிலேயே தற்போது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளது நிம்மதி அளிக்கும் தகவலாக பார்க்கப்படுகிறது.