COVID – 19 : தாயகம் திரும்ப விரும்பும் வெளிநாடுவாழ் தமிழர்களுக்காக புதிய இணைய வழி சேவை – தமிழக அரசு

TN GOV

இந்தியாவை பொறுத்தவரை கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 24 முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இதனால் அங்கு உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானப் போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் தமிழ்நாட்டைச் சேர்ந்த பல மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் நாட்டிற்கு வர இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அவ்வாறு வெளிநாடுகளில் இருக்கும் தமிழர்கள், உடனடியாக தமிழ்நாட்டிற்கு திரும்ப விரும்புகிறவர்கள் நலனுக்காகவும், அவர்களின் குடும்பத்தினரின் நலனை கருத்தில்கொண்டும். அதே சமயம் அவ்வாறு வெளிநாட்டில் உள்ளவர்களின் எண்ணிக்கையினை அறியும் வகையிலும், மேலும் தமிழ்நாட்டிற்கு திரும்புகிறவர்களுக்கு தனிமைப்படுத்துதல் வசதிகள் ஏற்படுத்திடவும், அவர்களைப் பற்றிய தகவல்களை பெறுவதற்காக இணைய பதிவு வசதி புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.

அதனால் வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்ப விரும்பும் தமிழர்கள் nonresidenttamil.org என்ற இணையதளத்தில் பதிவு செய்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள், என்று தமிழக அரசு அறிக்கையில் தெரிவித்துள்ளது.