‘மாலேசிய – சிங்கப்பூர் எல்லை’ : PCA ஏற்படின் கீழ் 2000 பேர் மட்டுமே கடக்கலாம் – ஹிஷாமுதீன் துன் ஹுசைன்..!!

hishammuddin hussein
Image tweeted by hishammuddin hussein

தற்போது நிலவும் இக்கட்டான சூழ்நிலையில் மலேசிய மற்றும் சிங்கப்பூர் ஆகிய இரு நாடுகளுக்கு இடையில் அனுதினம் சென்று வரும் பயணிகளின் தேவையை முழுமையாக நிறைவேற்றும் வகையில் மலேசிய அரசுடன் இணைந்து செயல்பட சிங்கப்பூர் அரசு ஆயத்தமாக உள்ளது என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சக அதிகாரி ஒருவர் அண்மையில் தெரிவித்தார். இதில் குறுகிய கால தொழில்துறை மற்றும் அதிகாரபூர்வ பயணிகளாக மலேசியா மற்றும் சிங்கப்பூர் இடையே சென்று வருபவர்களும் அடங்குவர்.

இந்நிலையில் சிங்கப்பூருடன் எல்லை தாண்டிய பயணத்தை அனுமதிக்க மலேசியா சில வழிமுறைகளை பயன்படுத்த உள்ளதாக வெளியுரைத்துறை அமைச்சர் ஹிஷாமுதீன் துன் ஹுசைன் நேற்று நடந்த அமைச்சர்கள் கூட்டத்தில் அறிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 10ம் தேதி முதல் மலேசியா-சிங்கப்பூர் எல்லை நிபந்தனையுடன் திறக்கப்படும் என்று மலேஷிய அரசாங்கம் அறிவித்ததாக வெளியுறவு மந்திரி டத்துக் செரி ஹிஷாமுதீன் துன் ஹுசைன் தெரிவித்தார். உத்தியோகபூர்வ மற்றும் வணிக நோக்கங்களுக்காக RGL பசுமை பாதையின் வழியே 400 பேர் மட்டுமே கடக்கமுடியும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் PCA ஏற்படின் கீழ் ஒரு நாளைக்கு 2000 பேர் மட்டுமே எல்லை கடக்கமுடியும் என்றும் அறிவித்தார்.