இந்தியாவை பயமுறுத்தும் கொரோனா – ‘மலேசியா உள்பட 14 நாடுகளுக்கு புதிய தடை’

indian flag

உலக அளவில் 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் தற்போது கொரோனா நோய் பரவி உள்ளது. மேலும் இதுவரை இந்தியாவில் குறைந்த அளவிலேயே மக்கள் இந்த கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் ஜெய்ப்பூரில் ஒரு இத்தாலிய சுற்றுலாப் பயணிக்கு செய்த மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு COVID-19 கொரோனா வைரஸ் பாஸிட்டிவ் என உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளன.

இந்நிலையில் ஏற்கனவே இந்தியா விதித்த தடையை தற்போது அதிகப்படுத்தி உள்ளது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சீனா, தென்கொரியா, ஜப்பான், ஈரான், இத்தாலி, ஹாங் காங், மக்காவு, வியட்நாம், மலேஷியா, இந்தோனேஷியா, நேபால், தாய்லாந்து, சிங்கப்பூர் மற்றும் தைவான் ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு இந்திய விமான நிலையங்களில் கொரோனா வைரஸ் சோதனைக்கு உள்ளாக்கப்பட்ட வேண்டும் என்று இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பரவி வரும் கொரோனா பயத்தால் பல நாடுகளின் பல தடைகளை விதித்து வருகின்றன. இந்தியாவை பொறுத்தவரை மிக குறைவான அளவில் கொரோனாவால் பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும் தங்கள் நாட்டிற்குள் வருபவர்களை தீவிர கண்காணிப்பிற்கு பிறகே நாட்டிற்குள் அனுமதித்து வருகின்றது இந்தியா.

இந்நிலையில், சீனா, ஹாங்காங், தென் கொரியா, ஜப்பான், தாய்லாந்து மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட 14 நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரும் பயணிகள் அனைவரும் தீவிர சோதனைக்கு பிறகே நாட்டிற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், நோய் தொற்று இருப்பதாக சந்தேகபடப்படும் பயணிகள் 14 நாட்கள் தீவிர கண்காணிப்பில் தனிமைப்படுத்தி வைக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.