‘நிலவும் பொது நடமாட்டக் கட்டுப்பாட்டில் புதிய தளர்வு’ – மலேசிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி

Ismail

கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் 18ம் தேதி முதல் பொது நடமாட்டக் கட்டுப்பாடு மலேசியாவில் அமலில் உள்ளது. MCO எனப்படும் இந்த கட்டுப்பாட்டின் மூன்றாம் நிலை முடிந்து கடந்த ஏப்ரல் 29ம் தேதி நான்காம் நிலை கட்டுப்பாடு அமலில் உள்ளது. கடந்த ஏப்ரல் 29ம் தேதி முதல் தொடங்கிய இந்த புதிய கட்டுப்பாடு வருகின்ற மே மாதம் 12ம் தேதி வரை நீட்டிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை உணவு மருந்து போன்ற அத்யாவசிய பொருட்கள் வாங்க தேவையான நேரத்தில் மட்டும் வீட்டை விட்டு வெளியில் செல்ல அனுபாதிக்கப்பட்ட குடும்ப தலைவர்கள் தற்போது அவர்களுடன் மேலும் ஒருவரை வெளியில் அழைத்து செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, அதே சமயம் அவர்கள் அழைத்து செல்வது தங்கள் வீட்டில் உள்ள நபராக மட்டுமே இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் புதிய விதியின்படி உணவு, மருந்து மட்டும் இன்றி எல்லா வகையான அத்யாவசிய பொருட்கள் வாங்கவும் மக்கள் வெளியில் வரலாம் என்று கூறப்பட்டுள்ளது. அதுமட்டும் இல்லாமல் இந்த கட்டுப்பாடு தளர்வில் இன்று கூடுதலாக முன்பு விதிக்கப்பட்ட 10 கிலோ மீட்டர் தடையை விளக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி கூறியுள்ளார்.