வேகமாக பரவும் கொரோனா – ‘சீனாவிற்கு, மலேசியா விதித்த புதிய தடை..’

malaysia

சீனாவின் வுஹான் நகரில் பரவி வரும் கொரோனா என்னும் நோய்  தொற்று தாக்கி அந்த நாட்டில் சுமார் 800 பேர் இறந்துள்ளனர். இந்த நோய் தொற்று சீனா மட்டும் இல்லாமல் சுமார் இருவது நாடுகளில் பரவி உள்ளது. பரவி வரும் இந்த நோய் காரணமாக பல நாடுகள் சீனர்கள் தங்கள் நாட்டிற்குள் வர தடைகளை விதித்துள்ளது.

மலேசியா, கடந்த சில நாட்களுக்கு முன்பு வுஹான் நகரில் இருந்து சீனர்கள் மலேசியாவிற்குள் வர தடை விதித்தது. மேலும் சீனர்களுக்கு  VoA எனப்படும் Visa OnArrival மற்றும் eVisa சேவையையும் நிறுத்தியது. இந்நிலையில் சீனாவின் சீஜியாங் மற்றும் சியன்சூ மாகாணங்களில் இருந்தும் மக்கள் மலேசியா வருவதற்கு தடை விதித்துள்ளது.

மதிப்பிற்குரிய துணை பிரதமர் வான் இஸ்மாயில் இதுகுறித்து பேசும்போதும், தற்போது சீனா தனது நாட்டில் 5 மாகாணங்களை முடக்கியுள்ளதை அடுத்து மலேசிய அரசும் அந்த மாகணங்களில் இருந்து மலேசியா வருவதற்கு தடை விதிகப்படிருப்பதாக கூறினார்.

மேலும் இந்த தடையானது சீன மக்களுக்கு மட்டும் இன்றி பட்டியலில் குறிபிடப்பட்டுள்ள மாகாணங்களுக்கு அண்மையில் சென்று வந்த எல்லாம் நாட்டவருக்கும் பொருந்தும் எனவும் கூறியுள்ளார்.