பொது நடமாட்டக் கட்டுப்பாடு : மேலும் 14 நாட்கள் நீட்டிப்பு – மலேசிய பிரதமர்

malaysia prime minister

உலகத்தை உலுக்கி வரும் கொரோனா காரணமாக உலகம் முழுக்க பலியானவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தொட்டுவிட்டது. சுமார் 16 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இந்த நோயின் காரணமாக பதித்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மக்களை கொண்ட நாடக விளங்குகிறது, உலகின் வல்லரசு நாடான அமேரிக்கா. அங்கு சுமார் 4.5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், 15,000திற்கும் அதிகமான மக்கள் இறந்துள்ளனர்.

இந்நிலையில் மலேசியாவில் கடந்த மார்ச் மாதம் 18ம் தேதி அமலுக்கு வந்த பொது நடமாடக் கட்டுப்பாடு, முதலில் மார்ச் 31ம் தேதி வரை அறிவிக்கப்பட்டு பின்னர் ஏப்ரல் 14ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று ஏப்ரல் 10ம் தேதி இந்த கட்டுப்பாடு ஏப்ரல் 14க்கு பிறகும் நீடிக்குமா அல்லது விளக்கிக்கொள்ளப்படுமா என்று பிரதமர் அறிவிப்பார் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் நேற்று இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட மலேசிய பிரதமர், தற்போது நிலவும் சூழலை மனதில் கொண்டு நிலவும் இந்த கட்டுப்பாடு மேலும் 14 நாட்கள் நீடிக்கப்படுகிறது என்று கூறினார். ஆகையால் மலேசியாவில் வரும் ஏப்ரல் 28ம் தேதி வரை இந்த பொது நடமாட்டக் கட்டுப்பாடு அமலில் இருக்கும் என்பது உறுதியாகியுள்ளது. மேலும் உலக சுகாதார அமைச்சகத்தின் தலைவர் திரு. டெட்ராஸ், தற்போது நிலவும் ஊரடங்கை உடனடியாக விளக்குவது சரியான முடிவாக இருக்காது என்று உலக நாடுகளை எச்சரித்துள்ளார்.