மலேசியா : புக்கிட் ஜலில் குடிநுழைவு மையம் – தாய் மற்றும் நான்கு வயது மகனுக்கு நோய் தொற்று

Detention Camp Malaysia
File Picture

கடந்த சில வாரங்களாக மலேசியாவில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள் அனைவரும் மலேஷியா அரசால் கைது செய்யப்பட்டு வருகின்றனர். கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் சுமார் 2000 வெளிநாட்டவர்கள் உரிய ஆவணம் இன்றி கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளை சேர்ந்த மக்களும் அடங்குவர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்கள் தற்போது புக்கிட் ஜலில் மற்றும் செமெனியி தடுப்புக் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் அவ்வாறு அவர்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் போதிய வசதிகள் இல்லாமல் ஒரே அறையில் பலர் தங்க வைக்கப்பட்டுள்ளதால் அந்த இடங்களில் நோய் தொற்று அபாயம் அதிகம் உள்ளதாக கருதப்படுகிறது. இந்நிலையில் இதுவரை புக்கிட் ஜலில் மையத்தில் சுமார் 600-க்கும் அதிகமானோருக்கு நோய் தொற்று உறுதியானதை அடுத்து அங்கு பதட்டம் சூழல் நிலவி வருகின்றது.

நேற்று நிலவரப்படி புக்கிட் ஜலில் மையத்தில் குடிநுழைவு தடுப்பு முகாமில் ஒரு தாய் மற்றும் அவரது நான்கு வயது மகனுக்கும் கோவிட் -19 கிருமிக்கு கண்டறியப்பட்டுள்ளது. அந்த மையத்தில் பாதிக்கப்பட்ட முதல் குழந்தை இவர் என்பது குறிப்பிடத்தக்கது.