COVID – 19 : ‘மலேசியாவில் கொரோனா பாதித்த 80 சதவிகிதம் பேர் நலமடைந்தனர்’ – நூர் ஹிஷாம் அப்துல்லா

malaysia status 16.5.20

மலேசியாவில் கொரோனா குறித்து தினமும் ஏற்படும் பாதிப்பு மற்றும் குணமடையும் மக்களின் எண்ணிக்கை குறித்து சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டு வருகின்றது. இந்நிலையில் மலேசிய சுகாதார இயக்குனர் ஜெனரல் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில் (பகல் 12 மணி நிலவரப்படி) இன்று மட்டும் 17 பேர் புதிதாக கொரோனாவால் மலேசியாவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இது பாதிப்பு எண்ணிக்கையை 6872 ஆக உயர்த்தியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இன்று மட்டும் 73 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளாகவும் இதுவரை மொத்தம் 5512 பேர் இந்த நோயில் இருந்து பூரண குணமடைந்துள்ளாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது குணமடைந்தவர்களின் எண்ணிக்கையை 80.3 சதவிகிதமாக ஆக உயர்த்தி உள்ளது.

மேலும் இன்று கொரோனாவிற்கு மலேசியாவில் ஒருவர் உயிரிழந்த நிலையில் இதுவரை இறந்தவர்களின் எண்னிக்கை 113ஆக உயர்ந்துள்ளது. மேலும் 13 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.