கோலாலம்பூர் : OPS BENTENG – 300-க்கும் அதிகமான சட்டவிரோத குடியேறிகள் கைது..?

Illegal Migrants

அண்மைகாலமாக மலேசியாவில் சட்டவிரோத குடியேறிகளை கண்டுபிடித்து கைது செய்து வருகின்றது மலாசிய அரசு. மேலும் மே 1ம் தேதி தொடங்கப்பட்டு தற்போது வரை நடந்துவரும் OPS BENTENG என்ற நடவடிக்கையின் கீழ் பல சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கோலாலம்பூரில் நேற்று 300-க்கும் அதிகமான சட்டவிரோத குடியேறிகள் மற்றும் அவர்கள் வந்த படகுகளை ஓட்டி வந்த 100-க்கும் அதிகமான படகு ஓட்டுனர்களை மலேசிய அரசு கைது செய்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது தற்போது வரை வெளியிடப்படவில்லை என்று தவகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிகழ்வில் சந்தேகத்தின் அடிப்படையில் சில கடத்தல்காரர்கள் கைது செய்யப்படுள்ளதகவும் 13 படகுகளும் பறிமுதல் செய்யப்படுள்ளதகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் மலேசியாவிற்குள் சட்டவிரோதமாகநுழைய முயன்ற சுமார் 22 படகுகளையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் திருப்பி அனுப்பியதாகவும் மூத்த அமைச்சர் இஸ்மாயில் சபரி கூறியுள்ளார். சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைபவர்களை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.