‘மலேசியா வரமுடியாமல் தவிக்கும் மாணவர்கள் – விரைந்து நடவடிக்கை எடுக்கும் அரசு..!!

Students in Abroad
Picture Courtesy www.nst.com.my

தற்போது இந்த பூமி பந்தில் உள்ள அனைத்து நாடுகளும் ஒரு இக்கட்டான சூழலில் தவித்து வருகிறது என்று கூறினால் அதுநிச்சயம் மிகையல்ல. பல்வேறு தொழில், பல்வேறு துறைகள் தொடர்ந்து பரவி வரும் இந்த நோயின் காரணமாக தவித்து வருகின்றது. மலேசியாவில் தற்போது தொற்றின் அளவு குறைந்து வரும் நிலையில் கடந்த மே மாதம் முதல் மீட்சிக்கான நடமாட்ட கட்டுப்பாடு நடைமுறையில் இருந்து வருகின்றது.

இந்நிலையில் மலேசியாவில் பயிலும் சுமார் 20,000 மாணவர்கள் வெளிநாட்டில் சிக்கியுள்ளதாகவும் அவர்களை உடனடியாக தாயகம் அழைத்துவர அரசு முறையான நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

நேற்று பிரதமர் அலுவலக அமைச்சரான முஹமது ரிட்சுவான் யூசோப் அவர்கள் நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது இந்த தகவலை தெரிவித்தார். அமெரிக்கா போன்ற நாடுகளில் இன்னும் தொற்றின் அளவு குறையாத நிலையில் பன்னாட்டு விமான சேவைகள் அங்கு நிறுத்தப்பட்டுள்ளதால் மாணவர்களை அழைத்து வருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

?? Facebook  https://www.facebook.com/tamilmicsetmalaysia/
?? Twitter      – https://twitter.com/malaysiatms