Vante Bharath : கோலாலம்பூர் முதல் திருச்சி வரை – இன்று மாலை புறப்படும் ஏர் இந்தியா விமானம்..!

KL to Trichy Flight
Image tweeted by India in Malaysia

தற்போது உலக முழுக்க நிலவும் இக்கட்டான சூழல் காரணமாக தாயகம் செல்லமுடியாமல் தவித்து வரும் மக்களை சிறப்பு விமானங்கள் மூலம் தாயகம் அழைத்து சென்று கொண்டிருக்கிறது இந்திய நாட்டு அரசு. இந்நிலையில் ஏற்கனவே கடந்த சில மாதங்களாக வந்தே பாரத் என்ற திட்டத்தின் கீழ் ஏர் ஆசியா விமானங்களை இயக்கி 500-க்கும் அதிகமான இந்தியர்கள் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து இந்தியாவின் கொச்சி, டெல்லி, சென்னை, திருச்சி, கோவை மற்றும் பெங்களூரூ ஆகிய இடங்களுக்கு சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மலேசியாவில் செயல்படும் இந்திய high commission வந்தே பாரத் திட்டத்தின் கீழ் செயல்பட உள்ள அடுத்த கட்ட (மலேசியாவில் இருந்து இந்தியாவிற்கு) விமான சேவை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை அண்மையில் வெளியிட்டது. இதில் ஆகஸ்ட் மாதம் 3ம் தேதி முதல் 13ம் தேதி வரை கோலாலம்பூரில் இருந்து இந்தியாவின் பல பகுதிகளுக்கு மற்றும் அதற்கான டிக்கெட் பெரும் முறைகள் மற்றும் தொலைபேசி எண்களை ஏற்கனவே வழங்கியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடந்த 3ம் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து இந்த மாதத்தின் முதல் மீட்பு விமானம் திருச்சி வந்தடைந்தது. இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ள இந்திய உயர் கமிஷன் கடந்த மார்ச் மாதம் 20ம் தேதி முதல் இந்த சிறப்பு விமான சேவை நடந்து வருவதாக தெரிவித்தது. மேலும் 13ம் தேதியை தொடர்ந்து விமானங்கள் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று ஆகஸ்ட் 9ம் தேதி ஏற்கனவே குறிப்பிட்டதை போல கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு இந்தியர்களுடன் ஏர் இந்தியா விமானம் புறப்பட உள்ளது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

?? Facebook – https://www.facebook.com/tamilmicsetmalaysia/

?? Twitter      – https://twitter.com/malaysiatms