வந்தே பாரத் : ’10 நாட்கள் 11 விமானங்கள்’ – மலேசியாவில் இருந்து இந்தியாவிற்கு அடுத்தக்கட்ட விமான சேவை

India in malaysia

தற்போது உலக முழுக்க நிலவும் இக்கட்டான சூழல் காரணமாக தாயகம் செல்லமுடியாமல் தவித்து வரும் மக்களை சிறப்பு விமானங்கள் மூலம் தாயகம் அழைத்து சென்று கொண்டிருக்கிறது இந்திய அரசு. இந்நிலையில் ஏற்கனவே சில விமானங்களில் 300-க்கும் அதிகமான இந்தியர்கள் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து இந்தியாவின் கொச்சி மற்றும் திருச்சி ஆகிய இடங்களுக்கு சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மலேசியாவில் செயல்படும் இந்திய high commission வந்தே பாரத் திட்டத்தின் கீழ் செயல்பட உள்ள அடுத்த கட்ட (மலேசியாவில் இருந்து இந்தியாவிற்கு) விமான சேவை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் வரும் ஜூன் மாதம் 9ம் தேதி முதல் 19ம் தேதி வரை 11 நாட்களில் 11 சிறப்பு விமானங்கள் இயக்கவுள்ளது. மேலும் டிக்கெட் முன்பதிவு குறித்த தகவல்களும் வெளியிடப்பட்டுள்ளது.